Kavin and Priyanka Mohan Join First Time in Tamil Cinema : கவின் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். பிக் பாஸ் மூலமாக பிரபலமாகியிருந்தாலும் டாடா படம் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமாவில் வருங்கால சூப்பர் ஹீரோவாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28
கவின் நடிக்கும் 9ஆவது படம்
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த கவின் அதன் பிறகு மாஸ் இயக்குநர் உடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தார். அதில் ஒரு படம் தான் டாடா. கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பீட்சா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான கவினுக்கு நட்புனா என்னானு தெரியுமா படம் தான் ஹீரோவாக அறிமுகம் செய்தது.
38
கவின்09 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
இந்தப் படத்தைத் தொடர்ந்து லிஃப்ட் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், கே பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் டாடா. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
48
கவின் - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஸ்டார், ப்ளெடி பெக்கர் படங்களில் நடித்தார். தற்போது இவருடைய நடிப்பில் கிஸ், மாஸ்க், ஹாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் கவின் நடிக்கும் கவின்9 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதல் முறையாக இணைந்துள்ளனர். இதுவரையில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இப்போது கவினுக்கும் ஜோடியாகவும் கமிட்டாகியுள்ளார்.
58
பிரியங்கா மோகன் உடன் ஜோடி சேர்ந்த கவின்
இந்தப் படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரோகித் ஆப்ரகாம் என்று சொல்லப்படும் ஓஃப்ரா இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தை இயக்குநர் கென் ராய்சன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னதாக கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
68
கவின்09 படத்தை இயக்கும் கனா காணும் காலங்கள் இயக்குநர்
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது ஒரு புறம் இருக்க இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த ஜோடி முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
78
கவின்09 படத்தை தயாரிக்கும் திங்க் மியூசிக்
ஏற்கனவே கவின், அபர்ணா தாஸ், ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் ஆகியோர் பலர் உடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக பிரியங்கா மோகன் உடன் நடிக்கிறார். இதற்கு முன்னதாக பிரியங்கா மோகன் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் டாக்டர், டான் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.
88
பிரியங்கா மோகன் நடித்த படங்கள்
பிரியங்கா மோகன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.