Chiyaan 64 Movie Official Announcement Released : விக்ரம் நடிக்கும் சியான்64 படத்தின் அப்டேட் குறித்து முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Chiyaan 64 Movie Official Announcement Released : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் வீர தீர சூரன் 2. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் சியான் 63 படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் சியான் 64 படம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23
இயக்குநர் பிரேம் குமார் – விக்ரம் கூட்டணி
அதன்படி, இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 64 படமான சியான் 64 படத்தில் நடிக்கிறார். பிரேம் குமார் இயக்கத்தில் இதற்கு முன்னதாக 96, மெய்யழகன் ஆகிய படங்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்போது விக்ரம் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
33
விக்ரம் நடிக்கும் 64ஆவது படத்தின் அறிவிப்பு வெளியீடு
மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் வரும் 2026ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷின் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.