
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கு சிறந்த உதராணம் நடிகர் கிங் காங் தான். அவர் ஆள் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் பின்னிபெடலெடுப்பார். அதிசய பிறவி திரைப்படத்தில் கிங் காங் ஆடிய பிரேக் டான்ஸை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு செம ஸ்டைலிஷாக ஆடி இருப்பார். இதையடுத்து தமிழில் நகைச்சுவை நடிகராக கிங்காங்கிற்கு அடையாளம் கொடுத்தது வடிவேலுவின் படங்கள் தான். அவருடன் சேர்ந்து போக்கிரி, சுறா, கந்தசாமி உள்ளிட்ட படங்களில் இவர் செய்த காமெடி கலாட்டா வேறலெவலில் ஹிட் ஆனது.
நடிகர் கிங் காங்கிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். இதில் கிங் காங் தன்னுடைய மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செம கிராண்டாக நடத்தி இருந்தார். திருமணத்துக்கு முன்னர் பிரபலங்களுக்கு கிங் காங் பத்திரிகை வைத்தது மிகவும் டிரெண்ட் ஆனது. முதல்வர் தொடங்கி நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுத்தது இணையத்தில் வைரலானது.
கிங் காங் மகள் திருமண வரவேற்பில் விஷால், ரோபோ சங்கர், ராதா ரவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஹைலைட்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர் அன்றைய தினம் மாலை திருவாரூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார். அங்கிருந்து திருச்சிக்கு வந்து, அங்கு விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவர், வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக கிங் காங் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். முதல்வரின் வரவால் மிகுந்த உற்சாகம் அடைந்த கிங் காங், அவருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். அதேபோல் பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், அதிமுக ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்த பின்னர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடிவேலு கொடுத்த மொய் பற்றி பேசி இருக்கிறார் கிங் காங். வடிவேலு சொந்த ஊரில் கோவில் கும்பாபிஷேக பணிகளில் பிசியாக இருந்ததால் அவரால் கிங் காங் மகள் திருமணத்துக்கு வர முடியாமல் போனதால். இதனால் தன்னுடைய உதவியாளரிடம் மொய் பணத்தை கொடுத்து அனுப்பிய வடிவேலு, கல்யாணம் முடிந்த பின்னர் போன் பண்ணி பேசினாராம். அப்போது இவங்க வரல, அவங்க வரலனு கவலைப்படாத கிங் காங், தமிழ்நாடு முதல்வரே வந்திருக்கிறார். அவர் வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்த மாதிரி என சொல்லி இருக்கிறார். அதோடு வடிவேலு தனது மகளின் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மொய் செய்திருந்ததாக கிங் காங் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுக்கு என்ன ஒரு தாராள மனசு என பாராட்டி வருகிறார்கள்.