Ravi Mohan : ரூ.6 கோடியை திரும்ப கேட்டு தயாரிப்பு நிறுவனம் வழக்கு: மௌனமாக இருக்கும் ரவி மோகன்; பின்னணி என்ன?

Published : Jul 16, 2025, 06:32 PM IST

Bobby Cinemas File Case Against Ravi Mohan : ரவி மோகனுக்கு முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை பாபி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் திரும்ப கேட்டு தராத நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

PREV
15
ரவி மோகனுக்கு எதிராக வழக்கு

Bobby Cinemas File Case Against Ravi Mohan : தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வலம் வருகிறார். எப்போது தனது மனைவியை பிரிவதாக அறிவித்தாரோ அப்போது முதல் அவரைப் பற்றிய செய்திகள் தான் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது ரவி மோகன் மீது பாபி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கூ தொடர்ந்துள்ளது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் விளக்கமாக பார்க்கலாம்.

25
ரூ.6 கோடியை திரும்ப தராத ரவி மோகன்

ரவி மோகனை ஹீரோவாக வைத்து ரூ.15 கோடியில் ஒரு படம் தயாரிக்க தயாரிப்பு நிறுவனமான பாபி சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கு அவரை ஒப்பந்தம் செய்து ரூ.6 கோடியை முன் பணமாகவும் கொடுத்திருக்கிறது. ஆனால், ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு படம் குறித்து எந்த அப்டேட்டும் ரவி மோகன் கூறவில்லை. படப்பிடிப்பு, பங்களிப்பு என்று எதிலேயும் ரவி மோகன் கமிட்டாகவில்லை. நாட்கள் கடந்தது தான் மிச்சம் என்று கருதிய தயாரிப்பு நிறுவனம் அவர் மீது குற்றம் சாட்டியது.

35
பாபி சினிமாஸ் நிறுவனம் வழக்கு

பல முறை திரும்ப கேட்டும் ரவி மோகன் தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்காத நிலையில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்த தயாரிப்பு நிறுவனம் நேரடியாக சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

45
பாபி சினிமாஸ் நிறுவனம் vs ரவி மோகன்

சமீப காலமாக ரவி மோகன் நடிப்பில் வரும் எந்த படமும் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பிறகு வந்த இறைவன், சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை என்று வரிசையாக எல்லா படத்தையும் தோல்வி கொடுத்தார். 

55
ரவி மோகனுக்கு முன் பணமாக கொடுக்கப்பட்ட ரூ.6 கோடியை திரும்ப கேட்கும் நிறுவனம்

தற்போது ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனீ, தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. சினிமா தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மனைவியை பிரிந்து கெனிஷா உடன் சுற்றி வருகிறார். எங்கு சென்றாலும் கெனிஷா உடன் சென்று வருகிறார். சமீபத்தில் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் அவருடன் கெனிஷாவும் சென்றிருந்தார். இருவரும் மாலையும் கழுத்துமாக நின்றிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories