Hi Movie Day 1 Box Office : கல்லா கட்டியதா கவின் - நயன் ஜோடி... ஹாய் முதல் நாள் வசூல் அப்டேட் இதோ

Published : Aug 29, 2026, 03:05 PM IST

Hi Movie Box Office : விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Hi Movie Box Office

நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு, பாக்யராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன், ஜீ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நயன்தாரா தயாரித்துள்ளார்.

Hi Review : கவின் - நயன்தாராவின் காதல் விருந்து அடிபொலியாக இருந்ததா? ஹாய் முழு விமர்சனம்

24
ஹாய் படத்தின் வசூல்

ஹாய் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.1.38 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள ‘ஹாய்’ படத்திற்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை ஃபிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார். பி. சேகர் கலை இயக்குநராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளுக்கான பணிகளையும் கவனித்துள்ளனர்.

Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்

34
ரிலீஸுக்கு தயாராகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’

இதனிடையே, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து படக்குழு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா கேமரா லென்ஸ் வழியாக பார்ப்பது போன்ற புகைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை டியூட் விக்கி இயக்கியுள்ளார். கௌரி கிஷன், தேவதர்ஷினி, நரேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Toxic Review : யாஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ

44
‘டாக்ஸிக்’ படத்திலும் கவனம் ஈர்த்த நயன்தாரா

நயன்தாராவின் சமீபத்திய திரைப்படப் பட்டியலில் ‘டாக்ஸிக்’ படமும் முக்கிய இடம் பிடித்துள்ளது. யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை உருவாக்கியுள்ள இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள நிலையில், உஜ்வல் குல்கர்னி எடிட்டிங் பணிகளையும், டி.பி. ஆபித் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். ‘ஹாய்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் வெளியீட்டிற்காக நயன்தாரா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories