Katrina Kaif - Vicky Kaushal : கோலாகலமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் மெஹந்தி விழா!!

Kanmani P   | Asianet News
Published : Dec 08, 2021, 10:49 AM IST

Katrina Kaif - Vicky Kaushal : நேற்று கோலாகலமாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று பஞ்சாபி பாணியில் பிரமாண்டமான முறையில்  கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் மெஹந்தி விழா நடைபெறவுள்ளது.

PREV
18
Katrina Kaif - Vicky Kaushal : கோலாகலமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் மெஹந்தி விழா!!
Kat bridal looks

பாலிவுட்டில் தற்போது பரவலாக பேசப்படும் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal )  திருமணம் ராஜஸ்தானில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளது.

28
katrina kaif wedding

கோலாகலமாக நடைபெற்று வரம் திருமண விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாபி இசையில் கோட்டை முழுவதும் களைகட்டி  இருந்தது. 

38
katrina kaif wedding

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் டிசம்பர் 7 ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும்,  டிசம்பர் 8 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்று , இறுதியாக, டிசம்பர் 9 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது.

48
Vicky Kaushal Katrina Kaif wedding

சில பாலிவுட் பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால்,  40க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சல்மான் கான், ஷாருக்கான், ஆலியா பட், ரோஹித் ஷெட்டி, ஃபர்ஹான் கான் மற்றும் பலர் அடங்குவர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

58
Vicky Kaushal Katrina Kaif wedding

பொழுது போக்கிற்கு, முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவர்களுக்கும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

68
katrina kaif wedding

பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் நாளை ராஜஸ்தானில் திருமணம் செய்ய உள்ளனர், இன்று அவர்களுக்கு பஞ்சாபி பாணியில் பிரமாண்டமான மெஹந்தி விழா நடைபெறவுள்ளது.

78
katrina kaif wedding


பிரமாண்டமாக நடைபெறும் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் திருமணம்  நடைபெறும்  700 ஆண்டுகள் பழமையான கோட்டை முழுதும் வண்ண விளக்குகளாலும்,வானவேடிக்கைகளாலும் ஜொலித்து வருகிறது.

88
katrinakaif wedding

இன்று மாலை ஆரம்பமாகும் ,கத்ரீனா- விக்கியின் மெஹந்தி விழாவில்  இரு தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளனர். விக்கிக்கு ஒரு பெரிய பஞ்சாபி குடும்பம் உள்ளது, அவர்கள் அனைவரும்  கத்ரீனாவை தங்களது  குடும்பத்தில் வரவேற்க காத்திருக்கின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories