Turmeric: மஞ்சளின் மகிமை... தினமும் சிறிதளவு உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் இவ்வளவு பயன்களா?

Published : Dec 07, 2021, 08:01 PM ISTUpdated : Dec 07, 2021, 08:03 PM IST

மஞ்சள் (Turmeric) ஒரு கிருமி நாசினியாக பயன்பட்டு நச்சுக்களை அழிக்கும் என்பது பொதுவாக அனைவருக்குமே தெரியும், ஆனால் இதையும் கடந்து தினமும் ஏதேனும் ஒரு வகையில் மஞ்சளை செய்தளவு உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் உண்டு. அவை என்னென்னென்ன என்பதை பார்க்கலாம்.  

PREV
16
Turmeric: மஞ்சளின் மகிமை... தினமும் சிறிதளவு உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் இவ்வளவு பயன்களா?

உடல் எடையை குறைக்கும் மஞ்சள்:

 

சமீப காலமாக பலரது பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருவது உடல் பருமன். இதனை குறைக்க எளிய வழிகளில் உங்களுக்கு உதவுகிறது மஞ்சள். தினமும் சிறிதளவு உங்களது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால், அது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை  கரைத்து அழகான உடல் தோற்றத்தை பெற உதவுகிறது.  குறிப்பாக மஞ்சள் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் இரத்த கொழுப்புகளின் அளவைக் குறைக்கும். இரத்த கொழுப்பு என்பது அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் உருவாகும் ஒரு வகை கொழுப்பு.

26

மன சோர்வை நீக்கும் மஞ்சள்:

உடல் சோர்வை கூட ஒருவரால் எளிதில் சமாளித்துவிட முடியும், ஆனால் மன சோர்வு என்பது... உங்களது ஒட்டு மொத்த சந்தோஷமான வாழ்க்கையையே கெடுத்துவிடும். நம்முடைய மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம்முடைய குணாதிசயங்கள் மட்டும் காரணமல்ல சில ஹார்மோன்களும் காரணம். அவை டோபமைன் (Dopamine), மற்றும் செரட்டோனின் (Serotonin) ஆகும். இவை ஆங்கிலத்தில் 'ஹேப்பி ஹார்மோன்' என அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோனை தூண்டும் சக்தி மஞ்சளுக்கு உள்ளது. எனவே உங்களது உணவில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொள்வதால் அதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமே...

36

சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து:

40 வயதை கடந்து விட்டாலே பலருக்கு கேட்காமல் வந்து விடுகிறது சர்க்கரை நோய். சர்க்கரை அளவை குறைப்பதற்கு பலர் மாத்திரை, இன்சுலின் போன்றவை எடுத்து கொண்டாலும், மஞ்சளை நீங்கள் உணவில் சேர்த்து கொள்வதால், அது இயற்க்கை மருந்தாக செயல்பட்டு உங்களின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

46

அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்

 

'அல்சைமர் நோய்' ஒருவிதமான மறதி குறைபாடு என்று கூறலாம். இந்த  மூளை நோயால் பாதிக்கப்பட்டால் ஒருவர் அவரது நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் இழக்க நேரிடும். இதுபோன்ற நோய் வருங்காலத்தில் கூட வராமல் தடுக்க உங்களது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்ளுங்கள். மஞ்சள் உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்த உதவுகிறது.

 

56

புற்றுநோயை தடுக்கும் மஞ்சள்

 

மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற வேதிப்பொருள், புற்றுநோய் எதிராக செயல்பட கூடியது. நச்சுத்தன்மை இல்லாத குர்குமின், ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய லுக்கிமியா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

66

பெருங்குடல் அழற்சி பிரச்சனையை தடுக்கும்:

 

பெருங்குடல் அழற்சி என்பது ஒருவகையான குடல் அழற்சி நோய். வயிற்று அசகரியத்தை உருவாக்கி எரிச்சலை ஏற்படுத்தும். இதனை தணிக்க மஞ்சள் உட்கொள்வது மிகவும் சிறந்தது.

click me!

Recommended Stories