Katrina: திருமணத்திற்கு அழைக்காத முன்னாள் காதலி கத்ரீனாவுக்காக சல்மான் கான் செய்த செயல்! பெரிய மனசு வேண்டும்!

Published : Dec 07, 2021, 05:28 PM IST

பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கும் (Vicky kaushal) , கத்ரீனா கைஃபுக்கும் (Katrina kaif)  டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கத்ரீனா தன்னுடைய முன்னாள் காதலரும், பாலிவுட் நடிகருமான சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், அவர் செய்துள்ள செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
17
Katrina:  திருமணத்திற்கு அழைக்காத முன்னாள் காதலி கத்ரீனாவுக்காக சல்மான் கான் செய்த செயல்! பெரிய மனசு வேண்டும்!

சமீபகாலமாகவே காதல் கிசுகிசுவில் சிக்கிய விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடி டிசம்பர் 9 ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களது மெஹந்தி, சங்கீத் மற்றும் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள், இன்று முதல் தொடங்குகிறது.

 

27

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் , உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 120 பேருக்குமட்டுமே  அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

 

37

குறிப்பாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான பாலிவுட் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

 

47

கத்ரீனா தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றாலும், சல்மான் கான் தன்னுடைய பாதுகாவலரான ஷேராவின் குழுவை  பாதுகாப்பு பணிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

57

திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க உள்ள ஷேராவின் டைகர் செக்யூரிட்டி குழுவினரிடம், யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது, செல்ஃபி எடுக்கக் கூடாது என்று ஏகப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

67

கத்ரீனா கைஃப் தன்னுடைய முன்னாள் காதலரான சல்மான் கானை விட்டு பிரிந்து விட்டாலும், அவருடன் எப்போதும் போல் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார்.

 

77

இந்த படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், திருமணம் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருமணத்திற்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் உதவி செய்வதில் மீண்டும் கில்லி என நிரூபித்துள்ளார் சல்மான் கான் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories