ஓடிடி-யில் மாஸ் காட்டிய சூர்யாவின் 'சூரரை போற்று' திரையரங்கில் வெளியாகிறது! செம்ம குஷியில் ரசிகர்கள்!

First Published | Dec 7, 2021, 3:46 PM IST

சூர்யா நடித்து - தயாரித்திருந்த 'சூரரை போற்று' (Soorarai Pottru) திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதால், தமிழ் திரையரங்க உரிமையாளர்கள், இந்த படத்தை மீண்டும் திரையரங்கில் ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டனர். ஆனால் தற்போது, இந்தப்படம் கேரள திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சாகமடைந்துள்ளனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாக ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

Tap to resize

பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இறுதிப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் பிரிவில் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் கிட்டதட்ட 100 படங்கள்வெளியிடப்பட்ட நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும் கிடைத்தது மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது.

அதே போல் ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்.

'சூரரை போற்று' திரைப்படம் வெளியாகி ஒருவருடம் ஆகும் நிலையில், தமிழக திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தாலும், கேரள திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளனர்.

டிசம்பர் 26 ஆம் தேதி, வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சூரரை போற்று படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகளை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே தெறிக்கவிட்டு வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

Latest Videos

click me!