தலைவர் 169 படம் கைநழுவியதால் ரூட்டை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்... புது கூட்டணியில் தயாராகிறது ஜிகர்தண்டா 2

Published : Apr 10, 2022, 08:32 AM IST

jigarthanda 2 : தலைவர் 169 பட வாய்ப்பு கைநழுவிப்போனதால், ஏமாற்றம் அடைந்த கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

PREV
14
தலைவர் 169 படம் கைநழுவியதால் ரூட்டை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்... புது கூட்டணியில் தயாராகிறது ஜிகர்தண்டா 2

விஜய் சேதுபதி நடித்த பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்ததாக ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கினார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி இப்படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

24

இதையடுத்து ரஜினியின் பேட்ட, தனுஷுடன் ஜகமே தந்திரம், விக்ரம் உடன் மகான் என அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து அவர் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

34

ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு இயக்குனர் நெல்சனுக்கு சென்றது. தலைவர் 169 பட வாய்ப்பு கைநழுவிப்போனதால், ஏமாற்றம் அடைந்த கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

44

ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் நடித்த சித்தார்த் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் பாபி சிம்ஹா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Kuttrame Kuttram :பீஸ்ட், கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் எதிரொலி... நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் நடிகர் ஜெய் படம்

click me!

Recommended Stories