சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ என பலரும் உள்ளனர்.
28
beast
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழ் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
38
vijay 66
பீஸ்ட் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இஇதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
48
vijay 66
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜை உடன் துவங்கியது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
58
vijay 66
தமன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் 4 நாட்கள் நடைபெற்றது. அரபிக் குத்து பாடல் வெற்றியை தொடர்ந்து அந்த செட்டில் தான் அடுத்த படத்தின் பாடலும் அமைய வேண்டும் என விஜய் கேட்டுள்ளார். அதன்படி சென்னையில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
68
vijay 66
பாடலை தொடர்ந்து மற்ற படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன படப்பிடிப்பு மே மாதம் தான் மீண்டும் துவங்கும் என கூறப்படுகிறது.
78
vijay 66
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜு..முதலில் தளபதி 66 படத்தில் நடிக்கப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நாயகி குறித்து பேசியுள்ளார்.
88
vijay 66
அதாவது பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தான் முதலில் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது தேதி கிடைக்காத காரணத்தால் ஒப்பந்தம் செய்யப்படவில்லையாம்.