கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில், லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அதன்படி இந்த படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.