Top 10 Tamil Serial TRP Rating : வார வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்களின் பட்டியலில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் இருக்கும் ஆனால் இந்த வாரம் ஜீ தமிழ் தொடரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
2025-ம் ஆண்டின் 8வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த 9வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 10வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 6.05 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த சன் டிவியின் இராமாயணம் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் பலத்த அடி வாங்கி 13வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.