ரேவதியை காப்பாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்! கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Sep 25, 2025, 05:10 PM IST

Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை' தீபம் தொடரில், ரேவதியை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், கார்த்திக் செய்யப்போவது என்ன என்பதை பார்ப்போம்.

PREV
14
கார்த்திகை தீபம் 2:

திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதிக்காக ரத்தம் கொடுக்க முன்வந்த மாரியிடம் பேசிய நிலையில் இன்று கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி குறித்து பார்ப்போம்.

24
மாரியை அழைத்து செல்ல கிளம்பும் கார்த்திக்:

அதாவது, மாயாவால் குண்டடி பட்ட ரேவதிக்கு உடல்நிலை மேலும் மோசமடைய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் ரேவதிக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்பதை அறிந்து, மாரியை அழைத்து செல்வதற்காக மயில்வாகனத்துடன் கிளம்பி வருகிறான்.

34
சாமுண்டீஸ்வரி கோபம்:

இங்கே நவீன், துர்கா ஆகியோர் ரேவதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வர சாமுண்டீஸ்வரி நீ என் பொண்ணே இல்லனு தலை மூழ்கிட்டேன், அப்படி இருக்கும் போது நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டு கோபம் கொள்கிறாள். ரோஹினி துர்காவை சமாதானம் செய்ய, அம்மா ரொம்ப கோவத்தில் இருக்காங்க, அதனால் இப்போதைக்கு ரேவதியை பார்க்க வேண்டாம் என்று கூறி அனுப்பி வைக்கிறாள், நாம சேரனும்னு நினச்ச ரேவதிக்காக இப்படியொரு நிலைமையா என்று வருத்தத்தோடு ஆறுதல் சொல்கிறான்.

கூடவே இருந்து குழிபறித்த கிரிமினல் குடும்பம்... ரூ.42 லட்சம் மோசடியால் அதிரடி ஆக்‌ஷன் எடுத்த சூர்யா

44
கடத்தப்படும் மாரி:

மறுபக்கம் கார்த்திக், மாரி வீட்டிற்கு வருவதற்கு முன்பாக சிவனாண்டியும் முத்துபாண்டியும் அங்கு வருகின்றனர், சிவனாண்டி கார்த்திக் போல் நடித்து மாரியை காரில் அழைத்து செல்கிறான். பின்னாடியே வந்த கார்த்திக் மாரி வேறொரு காரில் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைகிறான். சாமுண்டீஸ்வரி போன் செய்ய, கார்த்திக் அவங்களை பார்த்துட்டேன், கூட்டிட்டு வந்துடுறேன் என்று சொல்லி போனை வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து கார்த்திகை தீபம் 2 சீரியலை பாருங்கள்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.... தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிபதி

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories