கடன் வாங்கி தானம் பண்ண மனுஷன் அவரு... மயில்சாமி, மனோபாலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய கார்த்தி

Published : May 15, 2023, 09:35 AM IST

மனோபாலா, மயில்சாமி மற்றும் டிபி கஜேந்திரன் ஆகிய மூவரையும் இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது என நடிகர் கார்த்தி பேசி உள்ளார்.

PREV
14
கடன் வாங்கி தானம் பண்ண மனுஷன் அவரு... மயில்சாமி, மனோபாலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய கார்த்தி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த டிபி கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோர் இந்த ஆண்டு மரணமடைந்தனர். அவர்களின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் மூவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு அவர்களை பற்றி மனம்திறந்து பேசினர்.

24

அந்த வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது : “இவங்க மூவருமே பேசுவதற்கு முன்னாடி, அவர்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு மக்களை மகிழ்வித்தவர்கள். டிபி கஜேந்திரன் எப்பவுமே சந்தோஷமா இருப்பாரு, நடிகர் சங்கத்திற்கும் பக்கபலமாக இருந்தார். எப்போதுமே பாசிடிவாக இருக்குறவரு. பெரிய ஆளுமை உள்ள மனுஷன் அவர். 

இதையும் படியுங்கள்... ஓடிடியிலும் ஓஹோன்னு ஓடிய தி லெஜண்ட்... அஜித், விஜய் படங்களுக்கு நிகராக லாபம் பார்த்த அண்ணாச்சி படம்..!

34

மயில்சாமி, எனக்கு சிறுத்தை படத்திலிருந்து பழக்கம். தனக்கு மிஞ்சியது தான் தானம்னு சொல்வாங்க. ஆனால் தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர் அவர். கடன் வாங்கி தானம் பண்ணினார். சென்னை பெரு வெள்ளம் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை விற்று நிறைய பேருக்கு உணவளித்தார். யாருக்காகவும் உதவி கேட்க அவர் தயங்கவே மாட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டனாக இருந்து. அவரைப்போலவே வாழ்ந்தவர். அவரது இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது.

44

மனோபாலா, எல்லாரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர். நடிகர் சங்கத்தில் ஏதேனும் பெரிய விழா நடத்தினால் அவர் பொறுப்பாக முன்னெடுத்து நடத்துவார். அதேபோல் ஏதாவது பிரச்சனை வந்தாலோ, வாக்குவாதம் நடந்தாலோ சமாதானப்படுத்த முதல் ஆளாய் வருவார். ஈகோ இல்லாத மனிதன் அவர், வயசு வித்தியாசம் பார்க்காமல் எல்லாருடனும் ஈஸியா பழகக்கூடிய மனிதர் அவர். இவர்கள் மூவரையும் இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது” என கூறினார் கார்த்தி.

இதையும் படியுங்கள்... உலகின் சிறந்த அன்னை நீ... நயனின் அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து பாசத்தோடு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்கி

Read more Photos on
click me!

Recommended Stories