நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீசானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 475-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசானால் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.
ஆனால் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி கிடைக்காததால் அது இப்படத்தின் வசூலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக முதல் நாளிலேயே இப்படம் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஒருவேளை அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்திருந்தால் இந்த வசூல் இன்னும் அதிகரித்திருக்கக்கூடும்.
இந்நிலையில், விருமன் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளைப் போலவே இரண்டாம் நாளிலும் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விருமன் படம் இரண்டே நாளில் மொத்தமாக ரூ.16 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.