
1960 களில் காமெடி வேடத்தில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நாகேஷ். இவருடைய காமெடி ஹாலிவுட் நடிகர் ஜெனி லூயிசை நினைவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக பல ஒப்பிட்டு கூறுவது உண்டு. தன்னுடைய வார்த்தைகளால் மட்டும் ரசிகர்களை சிரிக்க வைக்காமல், உடல் மொழியாலும் சிரிக்க வைப்பவர் நாகேஷ்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், நம்மவர் படத்திற்காக தேசிய விருது, தமிழ்நாடு விருது, ஆகியவற்றை வென்ற இவர், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். மனம் உள்ள மருதராம் படத்தின் மூலம் 1958 அறிமுகமான நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்தார். அந்த வகையில் இவர் நடித்த உத்தமி பெற்ற ரத்தினம், தாயில்லாப் பிள்ளை, அன்னை, தெய்வத்தின் தெய்வம், பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், நானும் ஒரு பெண், நெஞ்சம் மறப்பதில்லை, போன்ற படங்கள் இவருடைய நடிப்பை அதிகம் கவனிக்க விதைத்து.
34 படத்தில் ஹீரோயின்; பிரபலம் கொடுத்த அழுத்தம்.. வேறு வழி இல்லாமல் ஐட்டம் டான்சராக மாறிய அனுராதா!
80-களில் சில படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கிய நாகேஷ், 90 மற்றும் 2000-களில் முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு, தாத்தா, மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து மிரட்டி உள்ளார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்த், போன்ற பல பிரபலங்களுடன் நடித்துள்ள பல படங்கள் தற்போது வரை இளவட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இவர் நடிப்பில் 1967-ல் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அனுபவி ராஜா அனுபவி'. இந்த படத்தில் நாகேஷும் கதாநாயகனின் ஒருவனாக ஒருவராக நடித்திருந்தார். முத்துராமன், ராஜஸ்ரீ, ஜெயபாரதி, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், டைப்பிஸ்ட் கோபு, டிபி முத்துலட்சுமி, எஸ் என் லக்ஷ்மி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ஐயா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தில் இடம்பெற்ற 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்கிற பாடல் ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களில் ஒன்றாக மாறிய நிலையில், இந்த பாடலை டி எம் சௌந்தரராஜன் பாடியிருந்தார். இந்த பாடல் 10 நிமிடத்தில் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாகேஷ் மற்றும் கண்ணதாசன் இருவரும் நட்பு ரீதியாக மிகவும் நெருக்கமானவர்கள். அனுபவி ராஜா அனுபவி படத்தின் தயாரிப்பு பணிகள் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்த கவிஞர் கண்ணதாசன், அடுத்து ஷார்ட் வந்து நாகேஷ் நடிக்கப் போகிறார் என்றதும், உன்னோட படத்துக்கு தான்யா பாட்டு எழுத வந்திருக்க, என்ன எழுதலாம் அப்படின்னு கேட்டுள்ளார். உனக்கு சென்னையை பத்தி என்ன தோணுது அப்படின்னு நாகேஷிடம் கண்ணதாசன் கேட்க, இங்க எங்கய்யா தமிழ் பேச ஆள் இருக்காங்க, காரு சாற்று புர்ருனு ரோட்டுல போய்கிட்டு இருக்கு என தனக்கு தோன்றிய விஷயங்களை அவரிடம் நாகேஷ் கொட்ட... அந்த வார்த்தைகளை அப்படியே உள்வாங்கி கொண்டு, 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்கிற பாடலை எழுதியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் மெட்டுக்கு ஏற்ப, இங்க மெதுவா போறவங்க யாரும் இல்ல... இங்க சரியா தமிழ் பேச ஆளும் இல்லை வார்த்தைகளை கோர்த்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். அதே போல் 1967-லேயே சென்னை எப்படி இருக்கு, சென்னை எப்படி இருக்க போகிறது? என்பதை தன்னுடைய பாடலிலேயே கூறி இருந்தார் கவிஞர் கண்ணதாசன். கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பிழைப்பை நடத்துபவர்கள் தான் அந்த சமயத்தில் பெரும்பாலும் இருந்த நிலையில் அவர்களின் மனநிலையிலேயே இந்த பாடல் எழுத்தப்பட்டிருந்தது. இந்த பாடலை, கண்ணதாசன் எழுத வெறும் 10 நிமிடம் மட்டுமே எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக்கா பிளான் போட்டு மனைவியை கழற்றி விட்ட ஜெயம் ரவி, அடுக்கடுக்கான புகார்களை குவித்த ஆர்த்தி!!