
நாடக உலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் எம்.ஆர்.ராதா. தன்னம்பிக்கை நிரம்பிய தனிப்பெரும் கலைஞனாக திகழ்ந்து வந்த எம்.ஆர் ராதாவின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். முக்கியமாக சினிமா, நாடகம் மற்றும் அரசியலில் அவர் நிகழ்த்திய கலகங்கள் ஏராளம். தமிழ் திரையுலகம் கண்டெடுத்த அற்புதமான கலைஞனான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையில் நடந்த திருமணம் மற்றும் அவரது காதல் வாழ்க்கை பற்றி தற்போது பார்க்கலாம்.
எம்.ஆர்.ராதா நாடகக் கம்பெனியில் பணியாற்றியபோது அவருக்கும் பிரேமாவதி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தன்னைப்போலவே கருத்து ஒற்றுமையும், அரசியலில் ஈடுபாடும் கொண்டிருந்ததால் பிரேமாவதியை உருகி உருகி காதலித்த எம்.ஆர்.ராதா அவரையே திருமணமும் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு தமிழரசன் என்கிற ஆண் குழந்தையும் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் அம்மை நோயால் மனைவி மற்றும் மகன் இருவரையும் இழந்தார் எம்.ஆர்.ராதா.
முதல் மனைவி இறந்த பின்னர் ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்திய எம்.ஆர்.ராதா, அங்கு சில பெண்கள் மீது காதல்வயப்பட்டதும் உண்டு. அப்படி அவர் வெவ்வேறு ஊர்களில் நாடகம் போடச் சென்றபோது சரஸ்வதி, தனலட்சுமி, ஜெயம்மாள் போன்றவர்களை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் குடும்பமும் நடத்தி வந்தார். மேலும் அந்தந்த ஊர்களில் அவர்களுக்காக சொத்துக்களையும் வாங்கி குவித்து வந்தார் எம்.ஆர்.ராதா.
இதில் சரஸ்வதி, தனலட்சுமி ஆகியோர் சகோதரிகள் ஆவர். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளார் எம்.ஆர்.ராதா. பின்னர் அவர் 5வதாக திருமணம் செய்துகொண்டவர் பெயர் கீதா. இலங்கைத் தமிழ்ப் பெண்ணான இவரை மணந்துகொண்டதோடு, அவருடன் குடும்பம் நடத்தி இரண்டு பெண்களையும் பெற்றுக்கொண்டார் எம்.ஆர்.ராதா. அந்த இரண்டு பெண்கள் வேறுயாருமில்லை தற்போது கோலிவுட்டில் நடிகைகளாக வலம் வரும் நிரோஷா மற்றும் ராதிகா தான்.
இதையும் படியுங்கள்... கடுப்பேற்றிய வித்யாசாகர்; கோபத்தில் கண்டபடி திட்டி யுகபாரதி எழுதிய பாட்டு! வேறலெவல் ஹிட்டான கதை தெரியுமா?
முதல் மனைவி இறந்ததை அடுத்து எம்.ஆர்.ராதா நான்கு திருமணம் செய்துகொண்டார். இதில் மூன்று மனைவிகள் மூலம் மட்டும் அவருக்கு 12 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பெயர், எம்.ஆர்.ஆர் வாசு, ராஜு, ராதா ரவி, மோகன், ராணி, ராஷ்யா, ராதா, கனகவல்லி, ராஜேஸ்வரி, கஸ்தூரி, நிரோஷா, ராதிகா ஆகும்.
இவர்களில் ராதாரவி சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். அதேபோல் ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் சினிமா மற்றும் சீரியல்களில் கோலோச்சினர். இதுதவிர மோகன் ராதா என்பவர் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தார். இவர்கள் தவிர எஞ்சியுள்ள எம்.ஆர்.ராதாவின் பிள்ளைகள் வெவ்வேறு துறைகளில் பணியாற்றினர்.
இதுபோதாதென்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்புகளில் நடித்தபோது அதில் தன்னுடன் நடித்த துணை நடிகையான ஞானம் மீது காதல் வயப்பட்ட எம்.ஆர்.ராதா, அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பிளான் போட்டு வேறு ஊருக்கு கடத்திச் சென்றுவிட்டாராம்.
இதை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் தன்னுடைய ஆட்களை அனுப்பி அந்த பெண்னை மீட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் வெறும் நாடகங்களில் மட்டும் நடித்து வந்திருக்கிறார் எம்.ஆர்.ராதா. இப்படி கோலிவுட்டில் ரியல் மன்மதனாக வலம் வந்த எம்.ஆர்.ராதா கடந்த 1979ம் ஆண்டு மஞ்சள் காமாலை நேயால் இறந்துபோனார்.
இதையும் படியுங்கள்... 34 படத்தில் ஹீரோயின்; பிரபலம் கொடுத்த அழுத்தம்.. வேறு வழி இல்லாமல் ஐட்டம் டான்சராக மாறிய அனுராதா!