
தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் கஞ்சா கருப்பு. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக பார்க்கப்படும் இவர், கடந்த மாதம் 2 வருடமாக வாடகை கொடுக்கவில்லை என ஹவுஸ் ஓனர் கொடுத்த புகார் காரணமாக காவல் நிலைய படி ஏறிய நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நடிகர் கஞ்சா கருப்பு மதுரவாயில் பகுதியில், ஷூட்டிங் வந்தால் தங்குவதற்கு சென்னையில் வீடு வேண்டும் என கூறி, ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியேறியுள்ளார். மாதம் பத்தாயிரம் என வாடகை நிர்ணயம் செய்த நிலையில், கஞ்சா கருப்பு கடந்த இரண்டு வருடமாக சரியாக வாடகை கொடுக்கவில்லை என்றும், தன்னுடைய வீட்டை உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாகவும்... ஒரு லாட்ஜ் போல் தன்னுடைய வீட்டை அவர் மாற்றி விட்டதாக கூறி, அந்த வீட்டின் உரிமையாளர ரமேஷ் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
5,000 சம்பளத்தில் தொடங்கி; இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் பட நடிகை யார் தெரியுமா?
காவலருடன் சென்று கஞ்சா கருப்பு வீட்டை பார்த்தபோது, பல பொருட்கள் உடைக்கப்பட்டிருந்ததோடு... தன்னுடைய கலைமாமணி விருது மற்றும் வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணம் காணவில்லை என கஞ்சா கருப்பு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை இரு தரப்பு மத்தியிலும் பேசி ஓய்ந்த நிலையில், தற்போது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை போரூரில் இருக்கும் நகர்ப்புற சமூதாய அரசு மருத்துவமனைக்கு, கஞ்சா கருப்பு தன் காலில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என இந்த வீடியோவில் கஞ்சா கருப்பு பேசியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மாணவர் ஒருவர் தலையில் காயத்தோடு வந்துள்ளார்... என்றும் பேசியுள்ளார். ஆனால் இங்கு ஒரு மருத்துவர்கள் கூட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?
அரசு தரப்பில் இதை மருத்துவ துறை அமைச்சர் கேட்க வேண்டுமா? இல்லையா ? என கேள்வி எழுப்பியதோடு மட்டும் இன்றி, அரசிடம் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு, எங்கேயோ கிளீனிக் வைத்து மருத்துவர்கள் சம்பாதித்து வருவதாக வசை பாடியுள்ளார். பின்னர் இவருடைய வீடியோவுக்கு விளக்கம் கொடுத்துள்ள மருத்துவமனை தரப்பு, மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியில் இருந்ததாகவும், ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே கால தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் மூன்று மருத்துவர்களும் சேர்ந்து அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.