
சினிமாவில் கடந்த சில வருடங்களில் மட்டும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு 90-களில் நடிகைகள் 30 வயதை நெருங்கி விட்டாலே அவர்களுக்கு பட வாய்ப்பு மறுக்கப்படும். இதன் காரணமாக பல ஹீரோயின், தொழிலதிபர், இயக்குனர், மற்றும் மாப்பிள்ளையை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகி உள்ளனர்.
ஆனால் இப்போதெல்லாம், நடிகைகளுக்கு திறமை மற்றும் மார்க்கெட் இருந்தால் போதும். 40 வயதாலும் சரி, திருமணம் ஆகி குழந்தை குட்டி பெத்தாலும் சரி, விவாகரத்தானாலும் சரி அவர்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகர்களும் தயக்கம் காட்டுவது இல்லை. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் எந்த விட ஆசோபனையும் கூறுவது இல்லை. மேலும் இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர் கூட, திருமணம் ஆன மற்றும் விவாகரத்து பெற்ற நடிகைகள் தான்.
ஒரு சில நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, இப்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான், 5000யிரம் சம்பளத்தில் தன்னுடைய சினிமா கரியரை துவங்கி இப்போது ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வரும் நடிகை சாய் பல்லவி.
ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?
இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக ஆசை இருந்தும், பின்னர் படிப்பில் ஆர்வம் கட்ட துவங்கினார். கடந்த ஆண்டு தன்னை விட 5 வயது இளைய தங்கைக்கு திருமணம் செய்து வைத்த சாய் பல்லவி இப்போதைக்கு நாடிபில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது லேடி பவர் ஸ்டார் சாய் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், கடந்த வாரம் இவர், தெலுங்கு நடிகர் நாக சைத்னயாவுக்கு ஜோடியாக நடித்த, தண்டேல் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் சின்னத்திரையில் துவங்கிய சாய் பல்லவி, `தி` நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக பங்கேற்றார். அந்த நேரத்தில் சாய் பல்லவி பெற்ற முதல் சம்பளம் ஐந்தாயிரம். பின்னர் 2015-ல் `ப்ரேமம்` (மலையாளம்) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தது மட்டும் இன்றி, இவரின் நடனம் தென்னிந்தியா முழுவதும் இவரை கவனிக்க வைத்தது.
பின்னர் தமிழில், தியா படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி... இந்த் படத்தை தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக மாரி, சூர்யாவுக்கு ஜோடியாக NGK போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அமரன் திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தது. தென்னிந்திய மொழிகளில் துளியும் கவர்ச்சி காட்டாமல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள தாவல் படி ரூ.6 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார். அதே போல் கடந்த ஆண்டு வெளியான அமரன் படத்திற்கு ரூ.3 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!