‘டெலிவரி பாய்’ ஆக மாறிய திண்டுக்கல் லியோனியின் மகன்!

Published : Feb 11, 2025, 04:12 PM IST

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் டெலிவரி பாய் ஆக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

PREV
14
‘டெலிவரி பாய்’ ஆக மாறிய திண்டுக்கல் லியோனியின் மகன்!
திண்டுக்கல் லியோனி மகன்

தமிழகத்தில் பட்டிமன்ற பேச்சாளராக மிகவும் பிரபலமானவர் திண்டுக்கல் லியோனி. தன்னுடைய கலகலப்பான பேச்சு திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த லியோனி, கடந்த 1997ம் ஆண்டு வெளியான கங்கா கெளரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் லியோனிக்கு, லியோ சிவக்குமார் என்கிற மகனும் இருக்கிறார். இவர் அழகிய கண்ணே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

24
ஹீரோவாக நடிக்கும் லியோனி மகன்

சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயகுமார் இயக்கிய அழகிய கண்ணே திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து லியோனி மகன் லியோ சிவக்குமார் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கார்த்தி மகன் கந்தனா இது? மளமளவென வளர்ந்துட்டாரே; திருப்பதி கோவிலில் எடுத்த போட்டோஸ் இதோ

34
லியோனி மகன் லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய்

இப்படத்திற்கு டெலிவரி பாய் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை நானி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் லியோனி மகனுக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். இவர் இதற்கு முன்னர் இரவின் நிழல், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

44
டெலிவரி பாய் பட பூஜை

இப்படத்தில் ராதிகா சரத்குமார், காளி வெங்கட், போஸ் வெங்கட் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதன் பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கலந்துகொண்டு கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார். எமோஷனல் ஆக்‌ஷன் டிராமா படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தில் டெலிவரி பாய் ஆக நடிக்கிறார் லியோ சிவக்குமார்.

இதையும் படியுங்கள்...ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?

click me!

Recommended Stories