இன்ஸ்டாகிராமில் அவருக்கு கணக்கு இருந்தாலும், அதனை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் முடக்கப்பட்ட முக்கிய பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அந்த வகையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கும் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள கங்கனா, தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்தால் உங்களுக்கு நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... புனீத் ராஜ்குமார் கடவுளின் குழந்தை... கொட்டும் மழையிலும் விசில் பறக்க பேசிய ரஜினி - வைரல் வீடியோ இதோ