சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? சர்ச்சைக்குரிய நடிகையை சந்திரமுகியாக்கும் பி.வாசு!

First Published | Nov 30, 2022, 1:56 PM IST

லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். இதுதவிர பிரபு, நாசர், வடிவேலு, நயன்தாரா, வினீத், மாளவிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருந்தது.

தற்போது 17 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் லாரன்சை நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதையும் படியுங்கள்... நிர்வாண போட்டோக்களை நான் வெளியிடல... லீக் பண்ணிட்டாங்க - பகீர் தகவலை வெளியிட்ட விஷ்ணு விஷால்

Tap to resize

இந்நிலையில், தற்போது அது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தான் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க உள்ளாராம். இயக்குனர் பி.வாசு, தான் இயக்க இருந்த வேறு ஒரு படத்தில் தான் கங்கனாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.

அப்படத்திற்காக கதை சொல்ல சென்றபோது, சந்திரமுகி 2-ம் பாகம் உருவாவது குறித்து கேள்விப்பட்ட, கங்கனா அதில் சந்திரமுகியாக யார் நடிக்கிறார் என கேட்டதும், இயக்குனர் பி.வாசு அதற்காக ஹீரோயினை தேடி வருவதாக கூறினாராம். உடனடியாக நான் அந்த ரோலில் நடிக்கிறேன் என விருப்பப்பட்டு கேட்டாராம் கங்கனா. உடனடியாக பி.வாசுவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இப்படி தான் சந்திரமுகி 2 பட வாய்ப்பை தட்டிதூக்கி உள்ளார் கங்கனா. ஜோதிகவை போல் இவரும் சந்திரமுகியாக மக்கள் மனதில் பதிவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அரசியல்வாதியாகும் மக்கள் செல்வன்... கர்நாடக முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் விஜய் சேதுபதி..?

Latest Videos

click me!