பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த சில மாதத்திற்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி அளித்தார். அவரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. அவர்மீது மும்பையில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இப்படி ரன்வீர் சிங்கின் போட்டோஷூட்டுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபுறம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சில பிரபலங்களும் இவ்வாறு போட்டோஷூட் நடத்தி வெளியிட்டனர். அதில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். படுக்கையறையில் அரை நிர்வாண கோலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையும் படியுங்கள்... ரவுடியா நீ... அட்ராசிட்டி செய்யும் அசீமை இறங்கி அடிக்கும் அமுதவாணன் - வைரல் வீடியோ இதோ