பாகுபலி படம் மூலம் பாப்புலர் ஆன நடிகர் பிரபாஸ், அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். பாகுபலி படத்தில் நடித்தபோது கூட அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் இருவரும் தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.