அரசியல்வாதியாகும் மக்கள் செல்வன்... கர்நாடக முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் விஜய் சேதுபதி..?

Published : Nov 30, 2022, 11:18 AM IST

கர்நாடக முன்னாள் முதல்வர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
அரசியல்வாதியாகும் மக்கள் செல்வன்... கர்நாடக முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் விஜய் சேதுபதி..?

வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மவுசு உண்டு. அந்த வகையில் இதுவரை வெளியான விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான பயோபிக் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது  மேலும் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.

24

அவர் யாரென்றால் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தான். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சட்டம் பயின்றவர் ஆவார். கடந்த 1983-ம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்த இவர், மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தார். அம்மாநிலத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த வெகு சில முதல்வர்களுள் இவரும் ஒருவர்.

இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

34

தற்போது சித்தராமையாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பான் இந்தியா அளவில் எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு, நடிகர் விஜய் சேதுபதியை சித்தராமையா கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளதால் அவரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் பொறுத்தமாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

44

இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் பயோபிக் படமாக இது அமையும். இதற்கு முன் அவர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால் அவர் அந்த ரோலில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அப்படம் தொடங்கும் முன்பே அதிலிருந்து வெளியேறிவிட்டார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... பட புரமோஷனுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா! தெருதெருவாக போஸ்டர் ஒட்டி அசத்தல்

Read more Photos on
click me!

Recommended Stories