Kamalhaasan Top 10 Movies: கமல்ஹாசனின் மெகாஹிட் திரைப்படங்களில்... மனதை விட்டு நீங்காத டாப் 10 படங்கள்..!

First Published Nov 7, 2022, 11:43 AM IST

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானத்தில் இருந்து, கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் வரை, அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் ரசிகர்கள் மனதை கவர்த்திழுந்த படங்கள் என்றாலும், இவர் நடிப்பில் வெளியாகி ... பல வருடங்களுக்கு பிறகும், இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களாலும் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் டாப் 10 படங்கள் குறித்த ஒரு பார்வை...
 

நாயகன்:

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், கமல் - சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி, இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. இந்த படம் மும்பையில் தாதாவாக இருந்த வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், 1988 ஆம் ஆண்டு 'நாயகன்' திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மூன்று தேசிய விருதுகளையும் வென்று குவித்தது.

பஞ்ச தந்திரம்:

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், காமெடியை அடிப்படையாக வைத்து வெளியாகி... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பஞ்ச தந்திரம்'. 5 நண்பர்களால் கமல்ஹாசன் எப்படி பட்ட பிரச்சனைகளில் சிக்குகிறார், என்பதை நகைச்சுவையுடன் கூறிய இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக, சிம்ரன் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், தேவயானி, ரம்யா கிருஷ்ணன், நாகேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர்.

Breaking: நடிகர் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! படக்குழு வெளியிட்ட தகவல்..!

விஸ்வரூபம்:

நடிகர் கமல்ஹாசன், கதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்த திரைப்படம் 'விஸ்வரூபம்' மற்றும் 'விஸ்வரூபம் 2'. இந்த படத்தின் முதல் பாகம் 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம், 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்தியன் ஸ்பை த்ரில்லராக வெளியான இந்த படத்தின், முதல் பாகம் பல்வேறு எதிர்ப்புகளை கடந்தே திரையரங்கில் வெளியாகி சாதனை படைத்தது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்தது போன்ற வெற்றி, இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பூஜா குமார் நடித்திருந்தார், ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன்:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் தேசப்பற்றுடன் வெளியான திரைப்படம் 'இந்தியன்'. 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில், கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 'இந்தியன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் தற்போது 'இந்தியன் 2' உருவாக காரணமாக அமைந்துள்ளது.

நீங்கள் எங்கள் பொக்கிஷம் 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் இருக்கும் மிரட்டல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ஷங்கர்!

தேவர் மகன்:

உலக நாயகனும்... உலக மகா கலைஞன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த திரைப்படம் 'தேவர் மகன்'. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இயக்குனர் பரதன் இயக்க, கமல்ஹாசன் திரைக்கதை எழுதி நடித்திருந்தது மட்டும் இன்றி, இந்த படத்தை தயாரித்தும், இருந்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 தேசிய விருதுகளை பெற்ற இந்த படம், ஆஸ்கர் விருதுக்கும் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கதையை நடிகர் கமல்ஹாசன் 7 நாட்களில் எழுதி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருமாண்டி:

கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த மிக சிறந்த படங்களில் ஒன்று 'விருமாண்டி'. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மரண தண்டனை தேவையில்லை என்பது போன்ற கருத்தை வலியுறுத்திய திரைப்படம். வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், சாதி, அரசியல் , மரண தண்டனை போன்ற கருத்துக்களை வலியுறுத்தியதால்... சில விவாதங்களுக்கும் ஆளானது.

Bobby Simha: 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..! வெளியான போட்டோஸ்..!

வசூல் ராஜா MBBS 

இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு, கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் வசூல் ராஜா MBBS. சிறிய வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து தாதாவாக மாறிய கமல், பெற்றோரிடம் தான் ஒரு மருத்துவர் என பொய் சொல்ல, தன்னை பெற்றோர் காண வரும் போது நிஜமாகவே மருத்துவராக அவர் நடிப்பதும், பின்னர் மருத்துவ படிப்பில் சேர்ந்து... மருத்துவராக மாறுகிறாரா? இல்லையா என்பதை காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியான படம் தான் வசூல் ராஜா. சினேகா கதாநாயகியாக நடித்திருந்தார். கட்டிப்பிடி வைத்தியம் இந்த படத்தின் மூலமாகவே மிகவும் பிரபலமானது.

அன்பே சிவன்:

சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்' திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொழிலாளர்களுக்காகப் போராடும் சமரசமற்ற தொழிற்சங்கவாதியாக கமல் நடித்திருந்த இந்த படத்தில், கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். தன்னுடைய காதலியோடு ஊரை விட்டு வெளியேறும் போது கமல் விபத்தில் சிக்க, அவருடைய வாழ்க்கையே எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை உணர்வு பூர்வமாக வெளிக்காட்டிய திரைப்படம் இது.

Ajith Thunivu: அட்ராசக்க... மலேசியாவில் தூள் பறக்கும் 'துணிவு' பட புரமோஷன்..! மாஸ் காட்டும் ரசிகர்கள்..!

விக்ரம்:

கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வந்த கமல்ஹாசனுக்கு... சூப்பர் ஹிட் வெற்றியை தோடி கொடுத்தது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்' திரைப்படம். 68 வயதிலும் ஓவர் ஆல் ரசிகர்களை தன்னுடைய அசால்டான நடிப்பால் விக்ரம் படத்தின் மூலம் கவர்த்திழுத்தார். 150 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த படம், 450 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

click me!