முதன்முறையாக கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி... இயக்கப்போவது யார்? வந்தாச்சு சரவெடி அப்டேட்

Published : Nov 06, 2025, 08:35 AM IST

ஜெயிலர் 2 படத்தை கைவசம் வைத்திருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 173 திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

PREV
14
Thalaivar 173 movie announcement

46 வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பெரிய திரையில் இணையும் படம் வரவிருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. சைமா விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசனும், பின்னர் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர். ஆனால், நடிகர்களாக இணைவதற்கு முன்பே, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிப்பார் என்றும் செய்திகள் வந்தன. தற்போது அந்தப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24
சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் ரஜினி

ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இப்படம் 2027ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இருக்கும். ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும். ராஜ்கமல் பிலிம்ஸ் ஒரு செய்திக்குறிப்பின் மூலம் இந்த புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் இரு ஜாம்பவான்களை ஒன்றிணைப்பதோடு, ஐந்து தசாப்த கால நட்பு மற்றும் சகோதரத்துவத்தை கொண்டாடும் ஒரு கூட்டணியாகவும் இது இருக்கும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

34
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு

ராஜ்கமல் பிலிம்ஸின் 44வது ஆண்டில் இந்த பெருமைக்குரிய படம் வெளியாகிறது. கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். ரஜினிகாந்தை வைத்து 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர் சி, கமல்ஹாசனை வைத்து 'அன்பே சிவம்' படத்தை இயக்கினார். 1995ல் 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. பின்னர் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், கலகலப்பு, அரண்மனை என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

44
சுந்தர் சி-யின் அடுத்த படம்

13 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த அவரது 'மதகஜ ராஜா' படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அவரது இயக்கத்தில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் 'கேங்கர்ஸ்'. தற்போது நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. அதேசமயம், ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படம் 'ஜெயிலர் 2'. இது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாகும். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories