மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!

First Published | Sep 22, 2024, 1:02 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள, தக் லைப் படத்தின் டிஜிட்டல் உரிமை எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

Kamalhaasan

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் படு மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி தோல்வியை தழுவியது. இயக்குனர் ஷங்கரின் டச் இந்த படத்தில் துளியும் இல்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் தோல்வியை தழுவினாலும், கமல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கைகோர்த்ததால் தக் லைஃப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
 

Kamalhaasan and Maniratnam

'நாயகன்' படத்துக்கு பிறகு, கமல்ஹாசன் தன்னுடைய மருமகனும், இயக்குனருமான மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும்... இந்த படம் குறித்து புரோமோ காட்சி வெளியாகி... கமல்ஹாசனின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர், அபிராமி கோபிக்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷராஃ உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.

முதல் படத்திற்கு 10 ரூபாய் சம்பளம்! இரண்டே வருடத்தில்... லட்சங்களில் சம்பளம் வாங்கிய கமல் பட நாயகி?
 

Tap to resize

Thug Life Movie

கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. குறிப்பாக சென்னை, டெல்லி, புதுவை, கோவா, போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் மணிரத்னம். ஒருவழியாக தற்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை பார்ட்டி வைத்து 'தக் லைஃப்' படக்குழு கொண்டாடியுள்ள நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Thug Life Digital business:

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 தோல்வியை தழுவி இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்' பட இயக்குனர் மணிரத்னத்துடன் கை கோர்த்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 'தக் லைஃப்' படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவியதால், ஒருவழியாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம்.... ரூ. 149.70 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
 

Latest Videos

click me!