நடிகை என்பதை தாண்டி, பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றிய ஜெயப்பிரதா, 1986 இல், தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகாட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீகாந்த் ஏற்கனவே சந்திரா என்ற பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தார்.இந்த திருமணம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அரசியலிலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே வலம் வந்த ஜெயப்பிரதா... தற்போது குணசித்ர வேடங்களில் நடிக்கவே கோடி கணக்கில் சம்பளமாக வாங்கும் நிலையில் இவரின் முதல் சம்பளம் குறித்த தகவல் தாள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ஜெயப்பிரதா தன்னுடைய முதல் படத்திற்கு ரூபாய் 10 மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இதை தொடர்ந்து எண்ணி 5 படங்கள் நடித்து முடிப்பதற்குள் லட்ச கணக்கில் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.