சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Published : Sep 22, 2024, 08:16 AM ISTUpdated : Sep 22, 2024, 08:22 AM IST

நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட் பிரபுவுக்கு நேற்று வெளிநாட்டில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  

PREV
17
சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
Actress Samantha:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த  சமந்தா... ஒரு சிங்கபெண்ணாக இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதன் காரணம் அவரது கடின உழைப்பு தான்.

27
Samantha First Salary:

தன்னுடைய படிப்பை முடித்து விட்டு, சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில்... 500 -  1000 ரூபாய்க்கான பல திருமணங்களில் ரிசெப்ஷன் கேர்ளாக கலந்து கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு... ஆடிஷன் அட்டன் செய்துள்ளதாக பல பேட்டிகளில் இவரே கூறி உள்ளார்.

புருடா விடுகிறாரா ஆர்த்தி... பாடகியுடன் இருக்கும் தொடர்பு என்ன? உண்மையை புட்டு புட்டு வைத்த ஜெயம் ரவி

37
Samantha Movie

இவர் தமிழில் நடித்த முதல் படம், பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்த 'ஏ மாயா சேசாவா' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் இந்த படத்தை, 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்கிற பெயரில் கெளதம் மேனன் இயக்கி இருந்தார்.

47
Samantha and Naga Chaitanya Wedding

மிக குறுகிய காலத்தில், தெலுங்கில் மட்டும் அல்ல தமிழிலும் முன்னணி கதாநாயகியாக வளர்ந்த சமந்தா... லைம் லைட்டில் இருக்கும் போதே, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தா - சைதன்யா வாழக்கையில்... பிரிவு ஏற்பட, சமந்தா தேர்வு செய்து நடித்து வந்த படங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

இதல்லவா காவியக் காதல்... மனைவிக்காக வாலி இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறாரா?

57
Samantha Divorce

சைதன்யா மீதான கோவத்தில் வெளிப்பாடாக,  சமூக வலைத்தளத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கிய சமந்தா பின்னர், சில மாதங்களிலேயே விவாகரத்தையும் உறுதி செய்தார். இருவருமே மனம் ஒற்று பிரிவதாக அறிவித்தனர். சமந்தா, தற்போது தன்னுடைய மயோசிட்டிஸ் பிரச்னையை கடந்து... மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில், நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

67
Samantha Brother Wedding

அதன் படி பல பாலிவுட் படங்களிலும், பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலாவை தான் நாக சைதன்யா திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் சமந்தா நண்பர்கள் சிலர் சோபிதாவுடன் நாக சைதன்யா வைத்திருந்த உறவு தான் இந்த திருமண முறிவுக்கு காரணம் என்பது போல் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!

77
Samantha Family Photos

ஆனால் சமந்தா எதையும் கண்டு கொள்ளாமல், தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமந்தாவின் அண்ணன் டேவிட் பிரபுவுக்கும் நிக்கோலாய் என்கிற வெளிநாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. அப்போது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் சமந்தாவின் அண்ணனுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories