விஜய் டிவி பொறுத்தவரை இப்போது ஸ்டார் ஆன்கராக திகழ்ந்து வருபவர் தான் மா.கா.பா ஆனந்த், ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரம் ஏற்றும் நடித்தும் அசத்திய இவர், விஜய் டிவியை பொருத்தவரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் தான். இன்னும் சொல்லப் போனால் விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் விலகிய காலத்தில் இருந்து, அவருக்கு பதிலாக அவர் நடத்திய பல நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இப்போது மிகச் சிறந்த தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு சுமார் 2.5 முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இவர் சம்பளமாக பெறுகிறாராம்.