தளபதியை வைத்து தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பேரரசு, அடுத்தபடியாக தல அஜித் அவர்களை வைத்து இயக்கிய திரைப்படம் தான் "திருப்பதி". இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்தது. அதுமட்டுமல்ல அஜிதின் இந்த திருப்பதி படத்தில் ஒலித்த 6 பாடல்களுக்கும் பாடல் வரிகள் எழுதியதும் பேரரசு தான். தன்னுடைய படங்களில், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை மொத்தமாக அவரே எழுதிவிடும் திறன் கொண்டவர் பேரரசு. அதன் பிறகு பெரிய அளவில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவர் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் "புலி வருது", "பழனி", "திருவண்ணாமலை", "பந்தயம்" மற்றும் "திருத்தணி" என்று தொடர்ச்சியாக நல்ல பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் பேரரசுவின் சிறப்பே, தன்னுடைய திரைப்படங்களுக்கு மாவட்டங்களின் பெயரை வைப்பது தான்.