நடிகை நயன்தாரா, தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட, குழந்தைகளுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கு தான் கடந்த ஒரு வாரமாக தன்னுடைய விடுமுறையை கழித்து வருகிறார். அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி வரும் நயன்தாரா, தற்போது மகன் தன்னை கொஞ்சும் சில புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜெலஸ் ஆக்கி உள்ளார்.
தமிழ் திரையுலக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, எந்த அளவுக்கு மிகவும் பிரபலமோ.. அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர். சிம்புவுடன் ஏற்பட்ட காதல், பிரபு தேவாவை கடந்து ஒருவழியாக விக்னேஷ் சிவனிடம் முடிவடைந்தது. பிரபு தேவாவுடனான பிரிவுக்கு பின்னர் மனம் நொந்து.. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வார்த்தைகள் ஆறுதல் கொடுத்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க துவங்கினர்.