அமிதாப் பச்சனை விட 3 மடங்கு சம்பளம்! கல்கி படத்துக்காக 100 கோடி வாங்கிய கமல்ஹாசன்?

Published : Jul 06, 2024, 10:55 AM ISTUpdated : Jul 06, 2024, 11:04 AM IST

உலக நாயகன் கமல்ஹாசன் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் கல்கி 2898 படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

PREV
15
அமிதாப் பச்சனை விட 3 மடங்கு சம்பளம்! கல்கி படத்துக்காக 100 கோடி வாங்கிய கமல்ஹாசன்?
Kamal Haasan Salary for Kalki 2898 AD

கல்கி படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இதில், அமிதாப் பச்சனை விட கமல்ஹாசன் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்கள் மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், இன்னும் சரியான பட்ஜெட் விவரம் வெளிவரவில்லை.

25
Kalki 2898 AD Salary and budget

படத்தில் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறும் தகவல்களின்படி, கல்கி படம் ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. பட்ஜெட்டில் பெரும்பாலான தொகை நடிகர்களின் சம்பளத்திற்கே செலவாகிறது என்றும் கூறப்படுகிறது.

35
Kalki 2898 AD Amitabh bachchan and Prabhas

இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு 10 நிமிட காட்சி மட்டுமே உள்ளது. ஹீரோவான பிராஸ் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறுகிறார். ஆனால், இரண்டு பேருக்கும் தலா ரூ.100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் என்ன சம்பளம் வாங்கி இருப்பார்கள்?

45
Kalki 2898 AD Deepika Padukone

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்தப் படத்தில் குறைவான சம்பளம்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். சுமார் ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை என்று சொல்கிறார்கள். பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனுக்கு சுமார் ரூ. 20 கோடி (ரூ. 200 மில்லியன்), திஷா பதானிக்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

55
Kalki 2898 AD Kamal Haasan Salary

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கும் கல்கி திரைப்படத்தின் சூட்டிங் 25 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும் ஊடகங்கிளல் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories