மிடில் கிளாஸ் குடும்பம், முதல் சம்பளம் ரூ.5000... இப்படிதான் என் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு: வரலட்சுமி சரத்குமார்

First Published | Jul 4, 2024, 10:10 PM IST

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்திருப்பதாகவும் முதலில் ஒரு டான்ஸ் ட்ரூப்பில் தான் தன்னுடைய கேரியர் ஆரம்பம் ஆனது என்றும் வரலக்ஷ்மி சரத்குமார் கூறியுள்ளார்.

Varalakshmi with her Father Sarathkumar

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி விஷாலுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருந்தார். பல ஆண்டுகள் கழித்து சென்ற மார்ச் மாதம் குடும்ப நண்பரான நிக்கோலாய் சக்தேவை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார்.

Varalakshmi Sarathkumar

ஜூலை 3ஆம் தேதி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் வரலட்சுமியின் கரம்பிடித்துள்ளார். 14 வருடமாகப் பழகிய நெருங்கிய நண்பரையே வரலட்சுமி கல்யாணம் செய்திருக்கிறார்.

Tap to resize

Varalakshmi Sarathkumar Wedding

வரலட்சுமியின் திருமணக் வைபத்தைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்துள்ளது. ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திருமண ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

Varalakshmi Sarathkumar Husband

வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எடுத்த ரிசெப்ஷன் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Varalakshmi Sarathkumar Photos

இந்நிலையில், வரலட்சுமி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம் பற்றியும் அவரது குடும்பம் படிப்படியாக கஷ்டப்பட்டு முன்னேறியது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

Varalakshmi Sarathkumar Biography

"நான் பிறக்கும்போதே ரிச் கிடையாது. அப்ப எங்க அப்பா ஒரு நியூஸ் பேப்பர் ஜர்னலிஸ்ட். மூணு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுதான் மேலே வந்திருக்கோம். எனக்கு பத்து வயசு ஆகுற வரைக்கும் அப்பாவோட படம் எதுவும் ஹிட் ஆகல. அந்த நேரத்தில் அப்பா, அம்மா இரண்டு பேருமே வேலை செஞ்சிட்டு இருந்தாங்க." என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Varalakshmi Sarathkumar Latest News

"ஒரு கட்டத்துல எங்க அப்பா, அம்மா கிட்ட காசு வாங்குறதை நிறுத்திட்டேன். என்னோட முதல் சம்பளம், ஒரு டான்ஸ் ட்ருப்ல ஆடினதுக்காக 5000 ரூபாய் கொடுத்தாங்க. இப்படித்தான் என் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு" என்றும் வரலக்ஷ்மி சரத்குமார் குறிப்பிட்டார்கள்.

Latest Videos

click me!