கமல் வாங்கிய காஸ்ட்லி சொத்துகள்! மேன்ஷன் முதல் கார் வரை... எல்லாமே உலகத்தரம்!

First Published | Jul 4, 2024, 5:01 PM IST

ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் கமல்ஹாசன் வைத்திருக்கும் காஸ்ட்லி சொத்துகள் என்னென்ன என்று தெரியுமா?

Kamalhaasan

ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகல் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இந்தியன் 2 படத்திற்காக அவர் 150 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 130 கோடி ரூபாய் வசூலித்து உள்ளார். சொகுசு வாழ்க்கை வாழும் கமல் வைத்திருக்கும் காஸ்ட்லி சொத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Kamal Haasan Chennai Properties

சென்னையில் 131 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இதில் ரூ.17.79 கோடி மதிப்பிலான 35.59 ஏக்கர் விவசாய நிலம், ரூ.19.5 கோடி மதிப்புள்ள இரண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரூ.92.05 கோடி மொத்த சந்தை மதிப்பு கொண்ட வணிகச் சொத்துகள் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக உள்ளன. ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மூதாதையரின் வீடு, 2021 இல் கணிசமான செலவில் புதுப்பிக்கப்பட்டது.

Tap to resize

Kamal Haasan London Bangalow

கமல்ஹாசன் வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி இருக்கிறார். குறிப்பாக, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான மாளிகை ஒன்று லண்டனில் கமலுக்குச் சொந்தமாக இருக்கிறது.

Kamal Haasan Lexus LX570

கமல் வைத்திருக்கும் சொகுசு வாகனங்களில் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 முக்கியமானது. இந்த உயர்தர கார் சுமார் 2.82 கோடி ரூபாய் விலை கொண்டது.

Kamal Haasan BMW 730LD

கமல்ஹாசன் பி.எம்.டபிள்யூ. 730 எல்.டி. கார் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்தக் சொகுசு காரின் விலை ரூ. 1.35 கோடி. இதுபோல பல சொகுசு கார்களை வாங்கியுள்ள கமல் பெரிய கார் கலெக்‌ஷனை வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Kamal Haasan Gold Watch

காஸ்ட்லீ வாட்ச்களை அணிவதில் பெயர் பெற்றவர் கமல்ஹாசன். 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோரம் கோல்டன் பிரிட்ஜ் கிளாசிக் ரோஸ் கோல்டு வாட்ச் கமலுக்குப் பிரியமான வாட்ச்களில் ஒன்று. 2022ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!