நாக சைதன்யாவை நான் வளர்க்கவில்லை, அவர் அகில் மாதிரி இல்லை... வளர்ப்பு தாய் சொன்னது இதுதான்!

Published : Jul 03, 2024, 09:47 PM ISTUpdated : Jul 03, 2024, 10:25 PM IST

நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைதான் நாக சைதன்யா. அகிலின் அம்மா அமலா ஒரு சந்தர்ப்பத்தில் தனது வளர்ப்பு மகன் நாக சைதன்யாவைப் பற்றி சில விமர்சனக் கருத்துக்களை தெரிவித்தார்.

PREV
17
நாக சைதன்யாவை நான் வளர்க்கவில்லை, அவர் அகில் மாதிரி இல்லை... வளர்ப்பு தாய் சொன்னது இதுதான்!

நாகார்ஜுனா இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். முதலில் மணந்தவர் ராமாநாயுடுவின் மகள் லட்சுமி. இவர்களின் மகன் நாக சைதன்யா. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 1992இல் நாகார்ஜுனா நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

27

பின் லட்சுமியும் இரண்டாவது திருமணம் செய்து சென்னையில் செட்டிலானார்கள். நாக சைதன்யா தனது தாயுடன் வளர்ந்தார். அப்பா நாகார்ஜுனா அவரைப் பார்க்க அவ்வப்போது வருவார். நாகர்ஜுனா ஹீரோவாக வளர்ந்ததும் தன் வாரிசான நாக சைதன்யாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நாக சைதன்யாவின் முதல் படம் ஜோஷ் 2009 இல் வெளியானது.

37

இரண்டாவது மனைவி அமலாவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் பிறந்த மகன் அகில். இவரும் 2015 இல் ஹீரோவாக அறிமுகமானார்.

47

அமலா ஒரு பேட்டியில் தனது வளர்ப்பு மகன் நாக சைதன்யா பற்றி சுவாரசியமான கருத்துக்களைத் தெரிவித்தார். "நாக சைதன்யா என்னுடன் வளரவில்லை. சென்னையில் அவர்களது தாயுடன் தங்கியிருந்தார். அவர் அவ்வப்போது இங்கு (ஹைதராபாத்) வந்து செல்வார். தந்தையுடன் நேரத்தைச் செலவிடுகிறார்" எனக் கூறினார்.

57
Nagarjuna Akkineni

"அகில் மற்றும் நாக சைதன்யா இடையே நல்ல பிணைப்பு இருந்தது. அகில் இங்கு வரும்போது சைதுவுடனே இருப்பது வழக்கம். அகில் சிறுவயதில் சைது எப்போது வருவான் என்று காத்திருப்பான். நாக சைதன்யா குறும்பு செய்வதில்லை. அகில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பான்" என்றும் அமலா கூறியுள்ளார்.

67

"இருவரின் படங்களும் வெளியாகும் போதெல்லாம் என் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்" என்கிறார் அமலா. அமலா சொல்வதில் இருந்து அவருக்கு சைதன்யாவுடன் நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அகிலுடன் வலுவான பந்தம் இருப்பது தெரிகிறது.

77

நாக சைதன்யா தற்போது சந்து மொண்டேடி இயக்கத்தில் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தொடர் தோல்விகளில் இருக்கும் நாக சைதன்யா தண்டேல் படத்தின் மூலம் மீண்டுவர விரும்புகிறாராம். அகிலின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. இருவருக்கும் அடுத்து வரும் படங்கள் ஹிட் ஆகிறாதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories