தெறிக்க விட்ட தளபதி விஜய்... மாணவர்கள் முன் ரியல் ஹீரோவாக சம்பவம் செய்த தவெக தலைவர்!

First Published | Jul 3, 2024, 6:37 PM IST

மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி பாராட்டும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசிய பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

கட்சி பெயரை மட்டும் அறிவித்து அரசியலில் குதித்த விஜய் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுத்தேர்வில் டாப் 3 இடம்பிடித்த மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கிறார்.

Tap to resize

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

இந்த விருதை கல்வி விருது என்ற பெயரில் கொடுக்கும் நடிகர் விஜய் தானே நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு பரிசைக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்திப் பேசவும் செய்கிறார்.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

அரசியல் ஆசை வந்துவிட்டதால், சென்ற ஆண்டுதான் இந்த விருது விழா நடத்தும் ஐடியா விஜய்க்கு வந்திருக்கிறது. இரண்டாவது ஆண்டில் இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

முதல் கட்ட நிகழ்வு ஏற்கெனவே ஜூலை 28ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

விஜய் கொடுக்கும் இந்த விருதைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

இன்று நடைபெற்ற விருது கொடுக்கும் சம்பவத்தில் மாணவ மாணவிகள் முன் பேசிய விஜய் நீட் தேர்வு கல்விக்கே எதிராக இருக்கிறது என்ற அபூர்வ கருத்தைக் கூறினார்.

Thalapathy Vijay Kalvi Viruthu 2024

அரசியலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கல்வி மற்றும் சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார்.

Latest Videos

click me!