ஷங்கருக்கு போட்டியாக போட்டோ பதிவிட்டு.. இந்தியன் 2 படத்தின் மெர்சலான அப்டேட்டை வெளியிட்ட கமல்ஹாசன்

First Published | Apr 7, 2023, 3:20 PM IST

இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் தைவானில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இந்தியன் 2 படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளனர்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கிய அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் ஷங்கர்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் தான் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடக்கிறது.

இதையும் படியுங்கள்... திடீரென மருத்துவமனையில் அனுமதி... நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு?

Tap to resize

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழுவினர் தைவானுக்கு சென்றிருந்தனர். அங்கு 4 நாட்கள் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து தைவானில் எடுத்த புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் முதலில் பதிவிட்டார். ரோட்டோரம் எடுத்த அந்த புகைப்படம் வைரலானது.

இதையடுத்து இயக்குனர் ஷங்கருக்கு போட்டியாக உணவகம் ஒன்றில் அமர்ந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் மோனோகுரோம் போட்டோ ஒன்றை பதிவிட்டு தைவான் ஷெட்யூல் முடிந்ததை அறிவித்தார் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2 படக்குழு அடுத்ததாக தென்னாப்பிரிகாவுக்கு சென்றுள்ளது. அங்கு ரெயில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க உள்ளார்களாம். இரண்டு வாரங்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... உலகின் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியல் வெளியீடு - மெஸ்ஸியை தட்டித்தூக்கி முதலிடம் பிடித்த ஷாருக்கான்

Latest Videos

click me!