தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர், இவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் தயாராகி வருகின்றன. கமலின் இந்தியன் 2, ஜெயம் ரவி ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அஜய் ஞானமுத்து இயக்கும் டிமாண்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீசான வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடு படமும் நாளை தான் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீசாக உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக தான் பிரியா பவானி சங்கரின் கல்யாணம் கமநீயம் படம் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் தற்போது பிசியாக நடந்து வருகிறது.