Yashika: லண்டன் டவர் பிரிட்ஜ் மேல் நின்று... செம்ம ஹாட் உடையில் இடையழகை காட்டி இம்சிக்கும் யாஷிகா ஆனந்த்!

First Published | Jan 13, 2023, 1:13 PM IST

'இருட்டு அறையில் முரட்டு குத்து'  பட நடிகை யாஷிகா ஆனந்த், லண்டன் டவர் பிரிட்ஜ் மேல் நின்று கவர்ச்சியான ஹாட் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகர் கெளதம் கார்த்தி நடித்த, அடல்ட் திரைப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தில் அளவு கடந்த கவர்ச்சியை வாரி இறைத்து, இளசுகள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக்பாஸ் சீசன் 2'  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு ரசிகர்களாலும், கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார்.

பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!

Tap to resize

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த யாஷிகா ஆனந்த், 98 வது நாளில் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி, என வரிசையாக பல  திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த யாஷிகா ஆனந்த், திடீரென விபத்தில் சிக்கி காயமடைந்தது அவரது ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

'வாரிசு' படத்தின் வெற்றியை இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளருடன் கொண்டாடிய தளபதி விஜய்! வைரலாகும் போட்டோஸ்!

நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு, மஹாபலிபுரம் அருகே இவர்களின் கார் வந்த போது, இந்த விபத்து ஏற்பட்டது. இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவரின் ஆண் நண்பர்கள் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நேர்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல விபத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ள யாஷிகா, தற்போது... இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஊதா நிற சேலையில் வச்ச வாங்காமல் பார்க்க வைக்கும்... 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை அர்ச்சனா! கியூட் போட்டோஸ்!

மேலும் அவ்வபோது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது லண்டன் டவர் பிரிட்ஜ் மேல் நின்றபடி விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஆரஞ்சு நிற குட்டை டாப்பில், வெள்ளை நிற பேண்ட் அணிந்து... தன்னுடைய மெல்லிய இடையழகை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் உள்ளன.

ஸ்ருதிஹாசனுக்கு மனநல பிரச்சனை இருப்பதாக பரவிய செய்தி... துணிவுடன் விளக்கம் கொடுத்த கமலின் வாரிசு

Latest Videos

click me!