உதயநிதியின் கலகத் தலைவன் முதல் கதிரின் யூகி வரை... இந்த வார ரிலீசுக்கு திரையரங்குகளில் வரிசைகட்டும் 8 படங்கள்

First Published | Nov 14, 2022, 12:12 PM IST

தமிழ் திரையுலகில் வாரத்துக்கு ஒன்றிரண்டு படங்கள் ரிலீசாகி வந்த நிலையில், இந்த வாரம் அதாவது வருகிற நவம்பர் 18-ந் தேதி மொத்தம் 8 படங்கள் ரிலீசாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கலகத் தலைவன்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன். இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். அதேபோல் பிக்பாஸ் பிரபலம் ஆரவ், இப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

நான் மிருகமாய் மாற

கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான சசிகுமார், முதன்முறையாக நடித்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் தான் ‘நான் மிருகமாய் மாற’. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ராந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் வருகிற நவ.,18-ந் தேதி அன்று ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்... ஹேக்கர்கள் பதிவிட்ட வீடியோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்

Tap to resize

யூகி

நடிகர்கள் கதிர், நட்டி நட்ராஜ், நரேன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் யூகி. ஜேக் ஹாரிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படமும் வருகிற நவம்பர் 18-ந் தேதி அன்று ரிலீசாக உள்ளது.

5 சிறு பட்ஜெட் படங்கள்

வருகிற நவம்பர் 18-ந் தேதி 5 சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக உள்ளன. அதன்படி காரோட்டியின் காதலி, 2323, நோக்க நோக்க, கெத்துல மற்றும் செஞ்சி ஆகிய 5 சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. இதுதவிர ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படமும் இந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... டிராக்டர் மோதியதில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

Latest Videos

click me!