
கடந்த இரண்டு, மூன்று, நாட்களாகவே ரோபோ சங்கர் மரணம் குறித்த பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு இருந்த ரோபோ சங்கர் தன்னுடைய ஆரம்ப காலத்தில், பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது விஜய் டிவியில் இவர் கலந்து கொண்ட 'கலக்க போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சி தான். இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் மெட்டீரியலாகவே மாறிய ரோபோ சங்கர், அது இது எது, ஜோடி நம்பர் ஒன், போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் .
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து இவர்களது ஒரே மகளான இந்திரஜாவும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியம்மா என்கிற ரோலில் நடித்து அசத்தி இருந்தார். அதன் பின்னர் விருமன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த இந்திரஜா, பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்த போதிலும் தன்னுடைய மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் . திரைப்படங்களில் தற்போது இவர் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .
கடந்த 2023 ஆம் ஆண்டு ரோபோ சங்கர் அதீத குடிப்பழக்கம் காரணமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். மிகவும் உடல் மெலிந்து மரணத்தின் விளிம்பிற்கே சென்ற இவரை... இவருடைய குடும்பத்தினர் தான் அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். இதை ஒரு விழிப்புணர்வு போல் பல்வேறு பேட்டிகளில் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரோபோ சங்கர் மீண்டும் உடல் நலம் தேறி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் கடந்த வாரம் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மனைவியுடன் இணைந்து ரோபோ சங்கர் கலந்து கொண்டார் அதேபோல் தான் நடிக்கும் பட விழாக்களிலும், உடல்நிலை சோர்வாக இருந்த போதும் ஓய்வெடுக்காமல் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தனுஷின் குபேரா முதல் புஷ்பா 2 வரை ஆஸ்கர் ரேஸில் குதித்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் ரோபோ சங்கர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் கொண்டு சென்ற நிலையில், நீர் சத்து குறைபாடு மற்றும் பிளட் பிரஷர் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுயநினைவு இல்லாமல் இருந்த ரோபோ சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் போது தான்... அவருக்கு உணவு குழாயில் ரத்தக்கசிவு இருப்பதும், கல்லீரலில் பிரச்சனை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை ஐ சி யு பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். ஆனால் அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்கியதாகவும் அவருடைய உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய மரணம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
ரோபோ சங்கரின் மரணம் குறித்து, பல பிரபலங்கள் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் இவருடைய நீண்ட நாள் நண்பரும், நடிகருமான காதல் சுகுமார், ரோபோ சங்கர் பற்றி பிரபல யூட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ரோபோ சங்கர் மிகவும் நல்ல மனிதர். சங்கர் பற்றி எப்போதாவது அவருடைய மனைவி பிரியங்காவிடம் கேட்பேன். அவருக்கு எவ்வளவுதான் சொல்வது என வேதனையோடு கூறுவார். சங்கரை குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர பிரியங்கா அவரிடம் பேசாமல் இருந்தார், சாப்பிடாமல் கிடந்தார். தலைப்பாடாக அடித்துக் கொண்டார் ஆனால் சங்கர் கேட்கவில்லை.
நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
அதே போல் ரோபோ சங்கருக்கு இலங்கையில் நண்பர்கள் அதிகம். படப்பிடிப்பு இல்லை என்றாலும் அங்கு செல்வார். சமீபத்தில் அவர் அங்கு போய் வந்துள்ளார். அங்கு ஒரு பார்ட்டியில் இவர் கலந்து கொண்டது தான் இன்று இவரின் உயிரையே பறித்துள்ளது என கூறியுள்ளார்.
இட்லி சுட பொறந்த மாதிரியே.. ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆனதா இட்லி கடை டிரெய்லர்?