கழற்றி வைத்த இதயத்தை அணியுங்கள்! காசாவை பார்த்து கதறும் வைரமுத்து!

Published : Sep 21, 2025, 12:45 PM ISTUpdated : Sep 21, 2025, 12:46 PM IST

பாடலாசிரியர் வைரமுத்து, காசாவில் நடக்கும் இன அழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

PREV
14
காசா குறித்து வைரமுத்து கவிதை

பாடலாசிரியர் வைரமுத்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான கவிதையை வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதையில், காசாவில் நடக்கும் இன அழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24
இஸ்ரேல் எங்கிருக்கிறது?

'இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை, ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும்' என்று தொடங்கும் இந்தக் கவிதை, உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் 'இருந்தும் இல்லாமல் இருக்கிறது' என்ற வேதனையான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

கவிதை மேலும், 65,000 மனித உயிர்கள் பறிக்கப்பட்டு, பஞ்சம் காரணமாக மனித மாமிசம் உண்ணும் அவலநிலை ஏற்பட்டிருப்பதாகவும், 'முளைக்குச்சியில் குத்திவைக்கப்பட்ட மண்டை ஓடுகளாய் குழந்தைகள்' என காசாவின் கோரமான நிலையை விவரிக்கிறது.

34
ஐ.நா.விற்கு வைரமுத்து வேண்டுகோள்

இந்தத் துயரங்களைக் கண்டு மனம் பதறியதாகவும், பாலைவனத்து மணலை வாயில்போட்டு மெல்லும் ஒரு சிறுவனின் காட்சியைக் கண்டு தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

'இந்த இனத் துயரம் முடிய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ள வைரமுத்து, ஐ.நா.வின் எண்பதாவது அமர்வில் இந்த 'நிர்மூலம்' நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்கா தனது 'வீட்டோ அதிகாரத்திற்கு விடுமுறை விடவேண்டும்' என வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

44
ஈரல் நடுங்கும் மனிதனின் ஈரக் குரல்

இறுதியாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிப்பிட்டு, "கழற்றிவைத்த இதயத்தை எடுத்து இருந்த இடத்தில் அணிந்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ள கவிஞர், இது "இந்தியாவின் தெற்கிலிருந்து ஈரல் நடுங்கும் ஒரு மனிதனின் ஈரக் குரல்" என்று தன் கவிதையை முடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories