காந்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் அள்ளியதா? காத்துவாங்கியதா? வசூல் நிலவரம் இதோ

Published : Nov 17, 2025, 01:08 PM IST

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் காந்தா திரைப்படம், எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Kaantha Movie Box Office Collection

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் துல்கர் என்ற நடிகரும் கொண்டாடப்படுகிறார். ஒரு நடிகராக எந்த வகையான கதாபாத்திரத்தையும், எந்த காலகட்டத்து கதாபாத்திரத்தையும் தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதை காந்தா மூலம் துல்கர் நிரூபித்துள்ளார். தனது சினிமா கெரியரிலேயே மிகச்சிறந்த நடிப்பை இதில் துல்கர் வெளிப்படுத்தி உள்ளார்.

24
காந்தா பட வசூல்

செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கிய இருக்கும் காந்தா திரைப்படத்தை துல்கரின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளன. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகளவில் இதுவரை 18 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் மூன்று நாட்களில் ரூ.6.25 கோடி வசூலித்துள்ளது.

34
காந்தா பாக்ஸ் ஆபிஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் தான் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. அப்படம் 16 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அந்த வசூல் சாதனையை காந்தா நெருங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல் கேரளாவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ.3.2 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலிப்பதே ஆச்சர்யம் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

44
100 கோடி வசூலிக்குமா காந்தா?

துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அதேபோல் காந்தாவும் வசூலிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இப்படம் மெதுவாக நகர்வதே அதன் பின்னடைவாக கூறப்படுகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்துள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories