வாய்விட்டு மாட்டிக்கொண்ட ராஜமெளலி... வாரணாசி பட விழாவால் கிளம்பிய புது சர்ச்சை

Published : Nov 17, 2025, 11:38 AM IST

ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட டைட்டில் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராஜமௌலி பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Rajamouli Hanuman controversy

புகழ் பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்த பிரம்மாண்ட விழாவில், மகேஷ் பாபு-பிரியங்கா சோப்ரா நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 'வாரணாசி' என தலைப்பு வைக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து ராஜமௌலி பேசிய வார்த்தைகள், தற்போது அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

24
வாரணாசி பட விழா சர்ச்சை

ஆம், ராஜமௌலியின் 'வாரணாசி' பட டைட்டில் வெளியீட்டு விழாவில் பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அது திறக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் டைட்டிலை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர். இறுதியில், சிக்கல் சரிசெய்யப்பட்டு டைட்டில் டீசர் காட்டப்பட்டது. அப்போது மேடையில் இருந்த 'வாரணாசி' பட இயக்குனர் ராஜமௌலி, அங்கு கூடியிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். ஆனால், அதன் பிறகு அவர் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்.

34
அனுமனை விமர்சித்த ராஜமெளலி

'எனக்குக் கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. என் மீது அனுமனின் ஆசீர்வாதம் இருப்பதாக என் தந்தை விஜயேந்திர பிரசாத் ஒருமுறை கூறினார். இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டபோது எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் அவன் (அனுமன்) எனக்கு உதவுவானா?' என்று ராஜமௌலி அங்கு கூறினார்.

மேலும், 'என் மனைவி அனுமனின் தீவிர பக்தை. அவள் அடிக்கடி தன் நண்பனைப் போல அவனுடன் பேசிக்கொண்டிருப்பாள். எனக்கு அவள் மீதும் கோபம் வந்தது. என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு உதவுவானா என்று பார்ப்போம்' எனக் கூறி டீசரை வெளியிட்டார்.

44
ராஜமெளலிக்கு எதிர்ப்பு

ஆனால், இது தற்போது அனுமன் பக்தர்கள் உட்பட பலரின் மன வருத்தத்திற்குக் காரணமாகியுள்ளது. ராஜமௌலியின் பேச்சை பலரும் கண்டித்துள்ளனர். படக்குழுவினர் செய்த தவறுக்கு அனுமனை எப்படி தரக்குறைவாக பேசலாம். ராஜமௌலி உட்பட படக்குழுவினர் முந்தைய நாள் அல்லது டைட்டில் வெளியீட்டிற்கு முன் ஒருமுறை சரிபார்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, தாங்கள் செய்த தவறுக்கு அனுமனை இழுத்தது தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒருசிலரோ அவர் அனுமன் குறித்துப் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வாத-விவாதங்கள் எங்கு சென்று முடியுமோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories