Published : Feb 19, 2025, 03:55 PM ISTUpdated : Feb 19, 2025, 04:01 PM IST
நடிகை ஜோதிகா, தற்போது ஹிந்தி திரையுலகில் பிசியாகி உள்ள நிலையில், இவர் நடித்து முடித்துள்ள Dabba Cartel என்கிற வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா பேசிய தகவல் இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்த ஜோதிகா, அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்த நிலையில் 2007 ஆம் ஆண்டு மகள் தியா பிறந்தாள். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மீண்டும் மகன் தேவ் பிறந்தான்.
26
ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா:
குழந்தைகள் நன்கு வளர்ந்த பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 36 வயதினிலே, மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில் இந்த படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி ஜோக்கு கை கொடுத்தது. இதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், விஜய், அஜித், சூர்யா உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் சோலோவாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா போர் அடித்துவிட்ட நிலையில், பாலிவுட் பக்கம் திரும்ப மும்பையில் குடியேறினார். தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படித்தான் கடந்த ஆண்டு இவர் அஜய் தேவ்கன் ஜோடியாக சைத்தான் படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார்.
46
டப்பா கார்டெல்:
தற்போது டப்பா கார்டெல் மற்றும் லயன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் டப்பா கார்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜோதிகா கூறியிருப்பதாவது: "காதல் தொடர்பான படங்கள், ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன். எனக்கு அதில் நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. ஹீரோக்களுடன் சுற்றியது எல்லாம் போதும். எனக்கு இப்போது 47 வயதாகிறது.
பெண்களை மையப்படுத்திய கதைகள், ஹீரோயினுக்கு அழுத்தம் தரக்கூடிய கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறேன். அது போன்ற ஒரு வெப் சீரிஸ் தான் டப்பா கார்ட்டெல். இதுவரையில் இப்படியான கதை எந்த ஒரு படத்திலும் வந்தது இல்லை. அதனால், இந்த வெப் சீரிஸீல் நடித்திருக்கிறேன். பொதுவாக வீட்டிலேயே இருக்கும் பெண்கள் எப்படி வெளியுலகை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த சீரிஸ் பேசும். இதில் என்னுடைய ரோல் ரொம்ப அழுத்தமாகவும், ஆழமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரிஸீன் மூலமாக பல பெண்களுக்கும் அவர்களுக்கு வாழ்க்கையில் நடந்தது போன்று ஒரு உணர்வு வரும் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 28ஆம் தேதி இந்த வெப் சீரீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
66
டப்பா கார்டெல் படக்குழு
ஹிதேஷ் பாட்டிய இயக்கத்தில் ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹங்கர், ஜிஷு சென்குப்தா, லில்லேட் துபே, பூபேந்திர சிங் ஜாதாவத் ஆகியோர் பலர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.