நடிகர் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் தாயார் திடீர் மரணம்!

Published : Feb 19, 2025, 02:41 PM IST

பிரபல நடிகரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பிரபலமுமான, சந்தோஷ் பிரதாப் தாயார் இந்திரா பாய் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  

PREV
15
நடிகர் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் தாயார் திடீர் மரணம்!
நடிகரின் தாயார் மரணம்

தமிழ் சினிமாவில் சிறந்த அறிமுகம் அமைந்தாலும், ஒரு சில நடிகர்கள் தற்போது வரை அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் உள்ளனர். சூழ்நிலையும் அவர்களுக்கு அப்படி அமைந்துவிடுகிறது. அந்த வகையில் தான் 2014 ஆம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் தயாரித்து - இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், சந்தோஷ் பிரதாப்.
 

25
நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், தற்போது வரை தமிழில் கிட்ட தட்ட 20-கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். எனினும் இவரால், நிலையான கதாநாயகன் என்கிற பட்டியலில் கூட இணைய முடியாமல் போனது. அறிமுகமான பொது தொடர்ந்து தாயம், பயமா இருக்கு, பொதுநலன் கருதி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும் இவரின் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற தவறியது.


 

35
குக் வித் கோமாளி சீசன் 3:

இதோ தொடர்ந்து தன்னை மக்களிடம் பிரபலப்படுத்திக்கொள்ளும் விதமாக, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவரின் சமையல் திறமை வெளிப்பட்டதே தவிர, படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஹீரோவாக நடித்து வந்த சந்தோஷ் பிரதீப் தற்போது, முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த, சர்பேட்டா பரம்பரை, அரண்மனை 4, பத்து தல போன்ற படங்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.
 

45
சந்தோஷ் பிரதாப் தாயார் மரணம்

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ். இந்த நிலையில், தற்போது இவருடைய தாயார் காலமான தகவல் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்தோஷ் பிரதாப்பில் தயார், இந்திரா பாய் உடல்நல குறைவு காரணமாக, நேற்று மாலை 7:40 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.

55
சந்தோஷ் பிரதாப் தாயார் இறுதி சடங்கு:

இவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி அளவில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடத்தி தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் சந்தோஷுக்கு ஆறுதலையும், அவரின் தாயாருக்கு இறங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories