Anna Serial: பரணியின் பிடிவாதத்தால் வரப்போகும் பிரச்சனை; சண்முகம் செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Feb 19, 2025, 01:28 PM IST

பரணியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டு, சௌந்தர பாண்டி குடும்பத்தை பிரிக்க முயற்சி செய்து வரும் நிலையில் ஷண்முகம் எப்படி அதை தடுக்க போகிறான். இன்னு என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.   

PREV
15
Anna Serial: பரணியின் பிடிவாதத்தால் வரப்போகும் பிரச்சனை; சண்முகம் செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
முத்துபாண்டியை ஏற்றிவிட்ட சௌந்தர பாண்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், நாள்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குடும்பங்கள் கொண்டாடும் தொடரான, 'அண்ணா' சீரியலில் சௌந்தர பாண்டி, முத்துபாண்டியை ஸ்டேஷனில் சந்தித்து, உன் தங்கச்சியை அமெரிக்காவுக்கு அனுப்பி வை அப்போ தான் அவள் வாழ்க்கை நல்லா இருக்கும் என சொல்ல முத்துபாண்டியும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறான்.

25
சமூகத்திடம் அம்மா ஆன்மா சொன்ன விஷயம்

முத்துப்பாண்டி, தங்கை  பரணியை சந்திக்க கிளினிக் வரும் நிலையில், இன்னொரு புறம் சண்முகம், அம்மாவின் ஆன்மாவே பரணி ஊருக்கு போக கூடாதுனு சொல்லிடுச்சு அதனால அவள் இங்கே தான் இருக்கனும் என நினைக்கிறான். இதை உடன்குடியிடம் சண்முகம் சொல்ல, அவன் உன் மனசுல இருக்குறத போய் முதல்ல பரணி கிட்ட சொல்லு என கூறுகிறான்.

Anna Serial: முத்துபாண்டியை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி; எச்சரிக்கும் ஆன்மா? அண்ணா சீரியல் அப்டேட்!

35
பரணியின் நம்பிக்கை:

அது தான் சரியாக இருக்கும் என கூறி, இருவரும் கிளம்பி கிளினிக் வருகின்றனர். இங்கே முத்துப்பாண்டியம் பரணியை பார்க்க கிளினிக் வந்த நிலையில், நீ அமெரிக்கா போய் நல்ல படியா படிச்சிட்டு வா. அதுதான் நம்ப ஊருக்கு பெருமை என சொல்கிறார். பரணி தன்னுடைய அண்ணனை பார்த்து, சண்முகமே என்னை அமெரிக்கா அனுப்பி வைப்பான் என நம்பிக்கையாக கூறுகிறாள்.

45
பூ - பிரியாணி வாங்கி வரும் ஷண்முகம்:

சரி வா நேரம் ஆகிடுச்சு நானே உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என சொல்ல, சமூகம் வருவான் என சொல்கிறாள். சமூகத்துக்கு பரணி போன் செய்ய, வண்டியில் வந்து கொண்டிருப்பதால் அவனால் போனை எடுக்க முடியாமல் போகிறது. பின்னர் முத்து பாண்டியுடன் பரணி வீட்டுக்கு செல்கிறாள்.

பரணியை பார்த்து பேச கிளினிக் வரும் சண்முகம் அவள் இல்லாததால் அப்செட் ஆகிறான். உடன்குடி சரி நீ வீட்டுக்கு போய் பரணி கிட்ட மனசுல இருக்குறத சொல்லு என்கிறான். வீட்டுக்கு போகும் போது, பரணிக்கு பூ வாங்கிக்கொண்டு செல்வது மட்டும் இன்றி, பரணிக்கு பிரியாணியும் வாங்கி கொண்டு செல்கிறான். பிரியாணி - பூ இரண்டையும் ஒரே பையில் வைப்பதால் பிரியாணி வாசனை பூவிலும் பூ வாசனை பிரியாணியில் இருக்கிறது.

பதறிய இசக்கி; ஷண்முகம் சொல்லியும் கேட்காமல் பரணி எடுத்த முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்!

55
அமெரிக்கா செல்வதில் உறுதி

கனி என்ன அண்ணே பிரியாணியில மல்லிகை பூ வாசம் என்று கலாய்க்கிறாள். ரூமுக்கு வந்த சண்முகம் பரணியிடம் பிரியாணி நல்லா இருந்துச்சா என கேட்க பூவை வாங்கி பிரியாணியிலயா வைப்ப என பரணி திட்டுகிறாள். மேலும் சண்முகம் , தான் அமெரிக்கா போக கூடாது என்று ஐஸ் வைக்க தான் இப்படியெல்லாம் செய்வதாக பரணி நினைக்கிறார். 

ஆனால் என்ன நடந்தாலும் அமெரிக்கா போவேன் என்று உறுதியாக இருக்கு பரணிக்கு பிரச்னையை புரிய வைத்து, சண்முகம் குடும்பம் பிரியாமல் காப்பாற்றுவாரா? அதற்கு சண்முகம் செய்யப்போவது என்ன என்பது பற்றி அரிய அண்ணா சீரியலை தொடர்ந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories